Asianet News TamilAsianet News Tamil

பகல் நேரங்களில் வாட்டி வதைக்கும் வெயில்... சென்னை வானிலை மையம் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

தமிழகத்தில் கோடைக்காலம் ஆரம்பிக்கும் முன்பாகவே பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால், பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். 

Temperature will increase in Tamil Nadu.. Chennai Meteorological Center tvk
Author
First Published Feb 20, 2024, 4:11 PM IST

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால், பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் இயல்பை விட வெப்ப நிலை 2 டிகிரி முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போட்ட புதிய மனு.. அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில்: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பிப்ரவரி 22ம் தேதி லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். பிப்ரவரி 23ம் தேதி வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

இதையும் படிங்க:  கந்து வட்டி கொடுமையால் அரசு ஊழியர் தற்கொலை.. இதை தடுக்கலனா இன்னும் பல பேர் சாவாங்க.. அலறும் அன்புமணி!

பிப்ரவரி 24ம் தேதி முதல் பிப்ரவரி 26ம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios