தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார் என்ற உத்தரவுக்கு எதிராக திருவண்ணாமலையைச் சேர்ந்த 4 ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. 

தமிழகத்தில் சுமார் 1500 ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தோல்வியடைந்த பின்னரும் பணியில் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பணியை பள்ளிக்கல்வித்துறை தீவிரப்படுத்தி இருந்தத. இது தொடர்பான வழக்கில் முக்கிய உத்தரவு வெளியாகியுள்ளது. தகுதி தேர்வில் தோல்வியுற்ற 1500 ஆசிரியர்களும் ஜீன் மாதம் நடைபெற உள்ள தேர்வில் பங்கேற்று எழுத வேண்டும் எனவும் இன்றைய உத்தரவில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.