சென்னையில் அதிர்ச்சி.. சாப்பிட்ட சுண்டலில் வெந்து இறந்து கிடந்த பல்லி.. தாய்,குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

சென்னை ராயபுரத்தில் டீ கடையில் பல்லி விழுந்த சுண்டலை சாப்பிட்ட தாய் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

tea shop...Lizard lying dead in chennai

சென்னை ராயபுரத்தில் டீ கடையில் பல்லி விழுந்த சுண்டலை சாப்பிட்ட தாய் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை எர்ணாவூர் பாரதியார் நகரை சேர்ந்த 35 வயதுடைய ஆரோக்கியராஜ் இவரது மனைவி வேளாங்கண்ணி. இவர்களுக்கு 10 வயதுடைய டெய்சி மற்றும் 8 வயதுடைய  மரியா நான்சி. இவர்கள் குடும்பத்துடன் இன்று ராயபுரம் எம்.சி.ரோட்டில் உள்ள ஜவுக்கடைக்கு சென்றுவிட்டு பின்னர் அப்பகுதியில் கிங் 5 ஸ்டார் என்ற டீ கடையில் குடும்பத்துடன் சென்று சுண்டல் சாப்பிட்டுள்ளனர். 

மரியா நான்சி சாப்பிட்ட சுண்டலில் இறந்துபோன பல்லி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து, அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், சுண்டல் சாப்பிட்ட 3 பேரும்  ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios