Asianet News TamilAsianet News Tamil

டாஸ்மாக் கடைகளுக்கு சிசிடிவி கேமரா… - அதிகாரிகள் அதிரடி முடிவு

டாஸ்மாக் கடைகளின் விற்பனைகளில் முறைகேடு நடப்பதாக தெரியவந்துள்ளது. பெட்டி பெட்டியாக மதுபானங்களை கடத்தி பாரில் வைத்து விற்பனை செய்வதும், முறைகேடாக விற்பனை செய்பவர்களுக்கு சப்ளை செய்வதும் நடக்கிறது. இதனால், டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த, டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

tasmac shop cctv camera
Author
Chennai, First Published Jun 20, 2019, 12:08 PM IST

டாஸ்மாக் கடைகளின் விற்பனைகளில் முறைகேடு நடப்பதாக தெரியவந்துள்ளது. பெட்டி பெட்டியாக மதுபானங்களை கடத்தி பாரில் வைத்து விற்பனை செய்வதும், முறைகேடாக விற்பனை செய்பவர்களுக்கு சப்ளை செய்வதும் நடக்கிறது. இதனால், டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த, டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் 3,590 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் 6000 சிசிடிவி கேமராக்களை, 3000 கடைகளில் பொருத்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. வீடியோ மேனேஜ்மென்ட் சிஸ்டம் (வி.எம்.எஸ்) என்ற பெயரில் கண்காணிப்பு கேமரா திட்டம் கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மண்டலம் மற்றும் தலைமை அலுவலகம் என 2 அளவில் கண்காணிப்பு பணி நடத்தப்படும். டாஸ்மாக் கடைகளின் விற்பனைகளில் முறைகேடு நடப்பதாக தெரியவந்துள்ளது. பெட்டி பெட்டியாக மதுபானங்களை கடத்தி பாரில் வைத்து விற்பனை செய்வதும், முறைகேடாக விற்பனை செய்பவர்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது என தொடர்ந்து புகார்கள் வருகின்றன.

டாஸ்மாக் கடைகளில் நேர விதிமுறை பின்பற்றப்படுவதில்லை. பெட்டிக்கடை, ஓட்டல்களில் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு, டாஸ்மாக் கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள், விதிகளை மீறி மதுபாட்டில்களை வழங்குவது முக்கிய காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை போல் வி.எம்.எஸ் திட்டத்தை தமிழகத்தில் கொண்டு வருவதற்காக கடந்த டிசம்பரில் டெண்டர் விடப்பட்டது. ஒப்பந்த நிறுவனங்களின் மதிப்பீடு தொகை அதிகமாக இருந்ததால் டெண்டர் இறுதி செய்யவில்லை.

தற்போது 2வது முறையாக டெண்டர் வெளியிடப்பட்டது. வரும் 10ம் தேதி இதற்கான டெண்டர் திறக்கப்படுகிறது. ரூ.15 கோடியில் 3 ஆயிரம் டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு கடையிலும் 2 கேமரா வீதம் 6 ஆயிரம் கேமராக்கள் அமைத்து, அமைத்து குரல் பதிவுடன் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, டாஸ்மாக் கடைகளில் நடக்கும் முறைகேடுகள், ஊழல்கள் குறித்து, அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்ழ ஆய்வு செய்யலாம் என அதிகாரிகள் கூறினர்.

Follow Us:
Download App:
  • android
  • ios