நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளின் தமிழ்நாட்டில் கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.639 கோடி அளவுக்கு மது விற்பனை நடந்துள்ளது.  

தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 16 முதல் 18 வரை மூன்று நாட்களுக்கு தமிழகம் முழுக்க உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டது. இதனால் டாஸ்மாக் விடுமுறைக்கு முன்னதாக விற்பனை வரலாறு காணாத அளவிற்கு விற்பனை ஆகியுள்ளதாம்.

 மதுரை டாஸ்மாக் கடைகளில் அதிகபட்சமாக ரூ.139 கோடி மதுவகைகள் விற்கப்பட்டுள்ளன. அடுத்து சென்னையில் ரூ. 136 கோடிக்கு டாஸ்மாக் விற்பனை களைகட்டியிருக்கிறது. 

விடுமுறை நாட்களை சமாளிப்பதற்காக குடிகார ஆசாமிகள் அதிக சரக்கை வாங்கி ஸ்டாக் வைப்பதால் விற்பனை அதிகரித்ததாக சொல்லப்படுகிறது.

டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு குறித்து டாஸ்மாக்’ அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘ தமிழ்நாட்டில் கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.639 கோடி அளவுக்கு மது விற்பனை நடந்துள்ளது. 

இதில் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் ரூ.139 கோடி, சென்னையில் ரூ.136 கோடி, திருச்சி ரூ.133 கோடி, சேலம் ரூ.120 கோடி, கோவை ரூ.111 கோடி என மது விற்பனையாகி உள்ளது  என்றார்.

‘டாஸ்மாக்’ கடைகளுக்கு தொடர் விடுமுறையால், கள்ளச்சந்தையில் அதாவது மூன்று நாட்களுக்கு தொடர் விடுமுறை என்பதால் மதுபானங்கள் கூடுதல் விற்பனை நடக்கிறதா? என்பது குறித்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.