தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, நாகை மற்றும் காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

தென் மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நகர்வு காரணமாக, தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழைக்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. 

சென்னையைபொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கூடலூர் பஜாரில் 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.