வங்கக் கடலில் வரும் 29-ம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் இயக்குநர் கூறுகையில் இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. காற்றழுத்தத் தாழ்வு பகுதியானது வரும் 27-ம் தேதியன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், இந்தக் காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் தமிழகத்தை நோக்கி நகர்ந்து மேலும் வலுப்பெற்று 29-ம் தேதி புயலாக உருவாக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக வரும் 29 மற்றும் 30-ம் தேதிகளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் தமிழக உள் மாவட்டங்களில் லேசானது முதல் இடியுடன்கூடிய கனமழை பெய்யுக்கூடும். மேலும் ஈரோடு, சேலம், கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம் மேமூட்டமாக காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் வெப்பச்சலம் காரணமாக தமிழகத்தில் ஆத்தூரில் 10 செ.மீ. மழையும், பெரியகுளத்தில் 6 செ.மீ., மழையும், திருவண்ணாமலை, ஓசூர், கிருஷ்ணகிரியில் தலா 5 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.