தமிழகத்தில் ஒரேநாளில் 11,681 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதேநேரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கையும் 50ஐ கடந்துள்ளது. 

தமிழகத்தில் ஒரேநாளில் 11,681 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதேநேரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கையும் 50ஐ கடந்துள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கடந்த 24 மணிநேரத்தில் 11,681 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதில், தமிழகத்தில் 11,611, வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 70 பேர் அடங்குவர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,13,378ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 4வது நாளாக 3,750 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,94,073ஆக உயர்ந்துள்ளது. 

இன்று மட்டும் 1,12,661 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதுவரை 2,15,13,210 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளது. இன்று கொரோனா உறுதியானவர்களில், 6,973 பேர் ஆண்கள், 4,708 பேர் பெண்கள் என பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 6,18,809 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 4,06,214 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 36 ஆகவும் உள்ளது.

இன்று மட்டும் 7,071 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 9,27,440ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் 53 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 21 பேரும், தனியார் மருத்துவமனையில் 32 பேரும் உயிரிழந்தனர். இதனையடுத்து, தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 13,258ஆக அதிகரித்துள்ளது. தற்போது 84,361 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதில், 12 வயதிற்குட்பட்ட 436 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஏப்ரல் 5ம் தேதி 128 சிறார்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகபட்சமாக செங்கல்பட்டு 947, கோவை 715, திருவள்ளூர் 529, மதுரை 462, சேலம் 401 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.