பெற்றோர் எதிர்ப்பை மீறி ஓடியோய் திருமணம்.. காதல் கணவருக்கு அந்த பழக்கமா? மன உளைச்சலில் புதுப்பெண் தற்கொலை.!

பெற்றோரின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்ட மகள் காதல் கணவரின் செயலைக்கண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Suicide of a young woman married for love in chennai

பெற்றோரின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்ட மகள் காதல் கணவரின் செயலைக்கண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காதல் திருமணம்

சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன், அமுதா தம்பதியினர். இவர்களது மகள் மேகலா (22).  இவர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது வேலைக்கு செல்லும் வழியில் சாலிகிராமத்தைச் சேர்ந்த யுவராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. யுவராஜ் போட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார். 

Suicide of a young woman married for love in chennai

குடிப்பழக்கம்

இந்நிலையில், இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் வீட்டாருக்கு தெரியவந்ததையடுத்து மேகாலாவிற்க்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்து வந்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த மேகலா கடந்த 8 மாதத்திற்கு முன்பு வடபழனி கோவிலில் யுவராஜ்வுடன் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகுதான் யுவராஜ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று மேகலாவிற்கு தெரியவந்துள்ளது. இதனால் தினமும் இருவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

 

Suicide of a young woman married for love in chennai

தற்கொலை

கடந்த 10 நாட்களுக்கு முன்பு யுவராஜ் மேகலாவை தாக்கியதை அடுத்து பெருங்களத்தூரில் உள்ள தன் தாய் வீட்டுக்கு வந்துள்ளார். காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன் நம்மை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை என நினைத்து மேகலா மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும், அவர்கள் பெற்றோரும் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், கடும் மன உளைச்சலில் ஆளான மேகலா வீட்டின் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மேகலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 8 மாதத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios