Chennai Rain: சென்னையை வாட்டி வதைத்த கோடை வெயில்.. குளிர்வித்த திடீர் மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இன்னும் சில நாட்களில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்க உள்ளது.

Sudden rain in various places in Chennai

சென்னையில் மந்தைவெளி, மயிலாப்பூர், எம்.ஆர்.சி.நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் மற்றும் புறநகர் மாவட்டங்களில் திடீரென கனமழை பெய்து வருகிறது. 

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இன்னும் சில நாட்களில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்க உள்ளதால் எப்படி சமாளிக்க போகிறோமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருந்து வந்தனர். வெயிலில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள அதிகளவில்  நீர், மோர் எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;- 12 மணி நேர வேலை மசோதா முழுமையாக திரும்பப்பெறப்பட்டது.! விட்டுக் கொடுப்பது அவமானமில்லை, பெருமை - மு.க.ஸ்டாலின்

Sudden rain in various places in Chennai

இதனிடையே, தென்இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இதையும் படிங்க;- ஏசி, ஹீட்டருக்கு அதிக மின்சாரத்தை பயன்படுத்தினால் அபராதம்.? தமிழக அரசின் புதிய திட்டம்.? ராமதாஸ் ஆவேசம்

Sudden rain in various places in Chennai

இந்நிலையில், கிண்டி, மந்தைவெளி, மயிலாப்பூர், எம்.ஆர்.சி.நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், சைதாப்பேட்டை, தி.நகர், மெரினா வடபழனி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. அதேபோல், புறநகர் மாவட்டமான செங்கல்பட்டிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் மழை சற்று குளிர்ச்சியை தந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios