பள்ளி வேன் மோதி மாணவர் துடிதுடித்து பலி.. கல்வித்துறை பரிந்துரையின் பேரில் பள்ளி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை.!

தீக்சித்(7) என்பவர் வளசரவாக்கம் அருகே உள்ள ஆழ்வார் திருநகர் பகுதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 28ம் தேதி பள்ளி வேன் மோதியதில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

Student killed in van collision - School principal dismissed

சென்னை ஆழ்வார் திருநகரில்  கடந்த மாதம் தனியார் பள்ளி வளாகத்தில் வேன் மோதியதில் சிறுவன் தீக்‌ஷித் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி முதல்வர் உள்ளிட்ட 3 பேரை பணி நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. 

பள்ளி மாணவன் உயிரிழப்பு

சென்னை விருகம்பாக்கம் இளங்கோவன் நகரை சேர்ந்தவர் வெற்றிவேல். இவர் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெனிபர். இவரும் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களின் மகன் தீக்சித்(7) என்பவர் வளசரவாக்கம் அருகே உள்ள ஆழ்வார் திருநகர் பகுதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 28ம் தேதி பள்ளி வேன் மோதியதில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

Student killed in van collision - School principal dismissed

சிசிடிவி காட்சிகள்

இது தொடர்பாக, பள்ளித் தாளாளர் ஜெயசுபாஷ், தலைமை ஆசிரியை தனலட்சுமி, வேன் ஓட்டுநர் பூங்காவனம், குழந்தை கவனிப்பாளர் ஞானசக்தி ஆகியோர் மீது வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து,  ஓட்டுநர் பூங்காவனம், ஞானசக்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வித்துறை அதிகாரிகள் போலீசார் ஆகியோர் பள்ளியில் விசாரணை நடத்தினர். மேலும், பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். 

Student killed in van collision - School principal dismissed

பணியிடை நீக்கம் 

அதில், வேனைவிட்டு இறங்கிய தீக்‌சித், பள்ளிக்கு நடந்து சென்ற போதுதான் விபத்து நேரிட்டது தெரியவந்தது. மாணவன் செல்வதை கவனிக்காமல் வேனை ஓட்டுநர் முன்பக்கமாக இயக்க, தீக்‌சித் மீது வேனின் முன்சக்கரம் ஏறி இறங்கிய காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. எனவே, வேனை பின்னோக்கி எடுக்கும்போது மாணவன் சிக்கி இறந்ததாக ஏற்கெனவே கூறப்பட்டது உண்மை அல்ல என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், பள்ளி முதல்வர் மற்றும் போக்குவரத்து குழு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளி நிர்வாகத்திற்கு கல்வித்துறை உத்தரவிட்டது. இந்நிலையில், பள்ளி வாகனம் மோதி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் தனியார் பள்ளி முதல்வர் தனலட்சுமி, போக்குவரத்து குழுவில் இருந்த 2 உறுப்பினர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios