மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் திடீர் திருப்பம்... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளி தாளாளர் ரவிக்குமார்,  பள்ளி முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

srimathi death case... Bail for 4 people including school principal

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளி தாளாளர் ரவிக்குமார்,  பள்ளி முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி என்ற மாணவி கடந்த மாதம் 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். பள்ளி நிர்வாகத்தினர், மாணவி ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும், பெற்றோர் தரப்பில் மகள் கொலை செய்யப்பட்டததாகவும் கூறினர். பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன் ,வேதியியல் ஆசிரியை ஹரி பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டுதல், பாதுகாப்பில் உள்ளவருக்கு தொல்லை கொடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். 

இதையும் படிங்க;- பலவந்தம் செய்யப்பட்ட ஸ்ரீமதி.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் அதிர்ச்சி.. வழக்கறிஞர் பரபரப்பு தகவல்..!

srimathi death case... Bail for 4 people including school principal

கைதான 5 பேரும் ஜாமீன் கோரிய மனுக்கள் விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தால்  தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, 5 பேரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர்கள் தரப்பில் மாணவியின் வலது பக்கத்தில் மட்டுமே காயம் உள்ளதாக முதல் பிரேத பரிசோதனை அறிக்கை கூறுவதாவும் நன்றாக படிக்குமாறு மட்டுமே ஆசிரியர்கள் கூறியதாகவும், மரணத்தில் எந்த பங்கும் தங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

சிபிசிஐடி காவல்துறை தரப்பில் பள்ளியில் விடுதி அனுமதியின்றி நடத்தியது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், நன்றாக படிக்குமாறு அவர்கள் அழுத்தம் கொடுத்ததாக கூறி, உயிரிழந்த மாணவி எழுதியதாக கூறப்படும் தற்கொலை குறித்த கடிதம் வாசித்து காண்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் முகாந்திரம் இருப்பதாலேயே ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மாணவியின் மரணம் பள்ளி வளாகத்தில் நடந்துள்ளதால், தீவிரமான வழக்கு என்றும், அதனால் மனுதாரர்கள் தான் பொறுப்பு என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவம் அந்த பள்ளியில் ஏற்கனவே இரண்டு முறை நிகழ்ந்துள்ளன என்றும், கொலை வழக்கு ஒன்றில் தாளாளர் ரவிக்குமார் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

srimathi death case... Bail for 4 people including school principal

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி இளந்திரையன், மனுதாரர்கள் 5 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டு, விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.  அப்போது சிபிசிஐடி தரப்பில் குறுக்கிட்டு, கடுமையான நிபந்தனைகள் விதிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- மகளுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால் இதுதான் ஒரே வழி.. ஸ்ரீமதியின் தாய் எடுத்த அதிரடி முடிவு..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios