இனி வரும் காலங்களில் மேற்படி படுக்கையில் முன்பதிவு செய்த பெண் பயணிகளுக்கு அதனை ஒதுக்கீடு செய்து தர வேண்டும். பேருந்து புறப்படும் வரை மேற்கூறிய படுக்கையில் பெண் பயணிகள் எவரும் முன்பதிவு செய்யாத பட்சத்தில் அதனை பொது படுக்கையாக கருதி மற்ற பயணிகளுக்கு ஒதுக்கீடு செய்து கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு விரைவுப் போக்குவரத்து கழகப் பேருந்துகளில் பெண்களுக்கு தனியாக 2 படுக்கை வசதிகளை ஒதுக்கீடு செய்யப்படுவதாக போக்குவரத்துறை அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்:- நமது கழகத்தால் இயக்கப்படும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்து, இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம், குளிர்சாதனம் இல்லா பேருந்துகள் பெண்களுக்கு தனியாக படுக்கை எண் 1 LB, 4 LB ஒதுக்கீடு செய்து இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள வழிவகை கண்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே இனி வரும் காலங்களில் மேற்படி படுக்கையில் முன்பதிவு செய்த பெண் பயணிகளுக்கு அதனை ஒதுக்கீடு செய்து தர வேண்டும். பேருந்து புறப்படும் வரை மேற்கூறிய படுக்கையில் பெண் பயணிகள் எவரும் முன்பதிவு செய்யாத பட்சத்தில் அதனை பொது படுக்கையாக கருதி மற்ற பயணிகளுக்கு ஒதுக்கீடு செய்து கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டிரைவர்கள், கண்டக்டர்கள், செக்கிங் இன்ஸ்பெக்டர்கள் ஆகியோருக்கு இதை தெரிவிப்பதுடன் அறிவிப்பு பலகை மூலம் நோட்டீசில் ஒட்டியும் தெரியப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.