Asianet News TamilAsianet News Tamil

1.kg- வஞ்சிரம் மீன் 1200 ரூபாய்..! மீன்பிடி தடையால் அதிரடி விலை உயர்வு ..!

மீன்பிடி தடைகாலம் அமலில் இருப்பதால் மீன்களின்  விலை  தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதனால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்று இருக்கிறார்கள்.

Seer fish rate high
Author
Tamil Nadu, First Published May 22, 2019, 1:36 PM IST

மீன்பிடி தடைகாலம் அமலில் இருப்பதால் மீன்களின்  விலை  தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதனால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்று இருக்கிறார்கள்.

 Seer fish rate high

வருட வருடம் கடல் மீன்கள் தனது இனப்பெருக்கத்திற்காக 45 நாட்கள் மீன்பிடிதடைகாலம் அமல்படுத்துவது வழக்கம். அதன்படி தற்போது மீன்பிடி தடைகாலம் அமலில் இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை மீன்கள் காசிமேடு, மேட்டூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் போன்ற இடங்களிலும் அதுபோக சில வெளிநாட்டு மீன்களும் சந்தைக்கு வருகிறது. Seer fish rate high

இதை அசைவப் பிரியர்கள் வாங்கி தினசரி உணவில் சேர்த்து கொள்வது வாடிக்கை ஆகிவிட்டது. ஆனால் இப்போது மீன்பிடி தடைகாலத்தால் தற்போது மீன்களின் விலை அதிகமாகிவிட்டது. அதன் படி சென்னையில் மீன்களின் விலை நிலவரமானது, வஞ்சரம், கொடுவா 1200, இறால் 1150, நண்டு 650, சிறிய இறால் 650, சங்கரா 580, கருப்புவல்வால் 800 ஆக விலை உயர்ந்துள்ளது. ஏற்கனவே காய்கறிகள் விலை உயர்ந்துள்ள இந்நிலையில் மீன் விலை உயர்வு இல்லத்தரசிகளையும் புலம்ப வைத்திருக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios