தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளிவைக்கப்பது தொடர்பாக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடந்த மாதம் முடிவடைந்த நிலையில், ஊரடங்கை வரும் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும் பள்ளிகளில் வரும் 16ம் தேதி முதல் 9,10,11,12-ம் வகுப்புகள் தொடங்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பள்ளிகள் திறப்பது தொடர்பாக பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் எழுந்தது. இதனையடுத்து, நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில், தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தற்போது சரியான தருணம் அல்ல என கருத்துக்கள் முன்வைத்ததாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து, தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளி, கல்லூரிகளை திறந்தால் தொற்று அதிகரிக்கும் என்பதால் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டிசம்பர் மாதத்துக்கு பின் பள்ளி, கல்லூரிகளை திறக்க முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.