அடடே! காமன்வெல்த் போட்டிக்கு தகுதிபெற்ற திமுக எம்.எல்.ஏ..! நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
உடல்நலனை பேணி காக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேரம் கிடைக்கும் போதெல்லாம் வலியுறுத்தி வருகிறார்.
உடல்நலனை பேணி காக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேரம் கிடைக்கும் போதெல்லாம் வலியுறுத்தி வருகிறார்.
திமுக எம்.எல்.ஏ.,-க்கள், எம்.பி.,-க்கள் மற்றும் அமைச்சர்கள் எப்போதும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களாக இருப்பார்கள். உதாரனமாக எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் வழக்கறிஞர்கள், மருத்துவர், பேராசிரியர், எழுத்தாளர் என பல்துறை அனுபம் கொண்டவர்களாக இருப்பதை இதுவரை கண்டிருப்போம். ஆனால் இம்முறை விளையாட்டு துறையும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பொறுத்தவரை உடல்நலனை பேணி காக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் வலியுறுத்தி வருகிறார். இதற்காக அவர் நடைபயிற்ச்சி செல்வதும், சைக்கிளிங் செய்வது, வீட்டில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக உடற்பயிற்சிக் கூடத்தில் இந்த வயதிலும் தளராமல் உடற்பயிற்சி செல்வது என அனைத்தையும் வீடியோவாக அவரது சமூக வலைதள பக்கங்களிலும் பகிர்ந்து வருகிறார்.
தடகளத்தில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பவராக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளங்குகிறார். அமைச்சராகிய பின்னரும் மாரத்தானில் பங்கேற்பது, சர்வதேச அளவிலான மாரத்தான் போட்டிகளில் இணைய வழியில் பங்கேற்பது என அசத்தி வருகிறார் மா.சுப்பிரமணியன். இந்தப் பட்டியலில் தற்போது சங்கரண்கோவில் திமுக எம்.எல்.ஏ. ராஜாவும் இணைந்திருக்கிறார்.
சமீபத்தில் மாநில அளவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் பங்கேற்ற திமுக எம்.எல்.ஏ. ராஜா முதலிடம் பிடித்து அசத்தியிருக்கிறார். அத்துடன் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்கவும் எம்.எல்.ஏ. ராஜா, தகுதிபெற்றிருக்கிறார். இதனையறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், எம்.எல்.ஏ. ராஜாவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். எம்.எல்.ஏ.-க்கள், அமைச்சர்கள் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்குவது உடன்பிறப்புகளுக்கு ஊக்கமளிக்கும் என்று நம்பலாம்.