சாதிக் பாட்ஷாவின் நெருங்கிய கூட்டாளி அதிரடி கைது.. என்ன காரணம் தெரியுமா? வெளியான பரபரப்பு தகவல்.!
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கெவின் கோவிலம்பாக்கம் பகுதியில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் நேற்று கெவினை வீடு புகுந்து கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே 7 மோசடி புகார்கள் உள்ள நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் குற்றம் செய்தது உறுதியானது.
சென்னையில் தனியார் கட்டுமான நிறுவனத்திடம் 50 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய வழக்கில் சாதிக் பாஷாவின் நெருங்கிய நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையை தலைமையிடமாக கொண்டு ஜி ஸ்கொயர் என்ற கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சார்பில் பல ஆயிரம் ஏக்கர் நிலம் வாங்கி கட்டுமான நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது. இந்நிலையில், ஜி ஸ்கொயர் நிர்வாகி புருஷோத்தம் குமார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தி.நகரில் ஸ்டால் வாட் என்ற ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் கெவின் உங்கள் நிறுவனம் குறித்து என்னிடம் ஏராளமான தகவல்கள் உள்ளன. அனைத்தும் வில்லங்கமானவை. இதுபற்றி, பிரபல வார இதழ் ஒன்றில் செய்தி வர உள்ளது. அதற்கு முன் உங்கள் பார்வைக்கு அனுப்பி வைக்கிறேன். இந்த செய்தி பிரசுரமாகி விடும். இனி செய்திகள் பிரசுரமாகாமல் இருக்க மாதம்தோறும் எனக்கு 50 லட்சம் ரூபாய் மாமூல் தர வேண்டும். மறுத்தால், தொடர்ந்து செய்தி வெளியிடப்படும் என மிரட்டினார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறியிருந்தார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கெவின் கோவிலம்பாக்கம் பகுதியில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் நேற்று கெவினை வீடு புகுந்து கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே 7 மோசடி புகார்கள் உள்ள நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் குற்றம் செய்தது உறுதியானது. இவர், 2 ஜி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாஷாவின் நெருங்கிய நண்பர் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கெவினை அடுத்த மாதம் 3ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டார். பணம் கேட்டு மிரட்டல் புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட கெவின் மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.