Asianet News TamilAsianet News Tamil

மாதந்தோறும் ரூ.5000 உதவித்தொகை திட்டம்… மாஸாக தொடங்கிவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…!

திருக்கோயில்களில் தலைமுடி மழிக்கும் பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று கடந்த மாதம் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார்.

Rs 5 thousands incentive scheme
Author
Chennai, First Published Oct 5, 2021, 6:42 PM IST

திருக்கோயில்களில் தலைமுடி மழிக்கும் பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று கடந்த மாதம் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார்.

திருக்கோயில்களில் முடி காணிக்கைக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதையடுத்து முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதனை பரிசீலித்த இந்து சமய அறநிலையத் துறை கோயில்களில் முடி திருத்தும் பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.5000 உதவித்தொகை வழங்கப்படும் என்று கடந்த மாதம் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

Rs 5 thousands incentive scheme

கோயில்களில் மொட்டைக்கு கட்டணம் இல்லை என்ற திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை வேப்பேரி ரிஹ்தர்டன் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு உதவித் தொகையுடன், அரிசி, பருப்பு உள்ளிட்ட 16 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்பையும் முதலமைச்சர் வழங்கினார்.

Rs 5 thousands incentive scheme

இந்த திட்டத்தின் மூலம் 349 திருக்கோயில்களில் பணியாற்றும் ஆயிரத்து ,744 பணியாளர்களுக்கு மாத ஊக்கதொகையாக ரூ.5,000 வழங்கப்படுகிறது. இதற்காக ஆண்டொன்றுக்கு அரசுக்கு ரூ.10.47 கோடி செலவாகும் என்று அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios