சென்னையில் பிரபல நகைக்கடையில் கொள்ளை.. சில மணிநேரத்தில் கொள்ளையர்களை பிடித்தது எப்படி? பரபரப்பு தகவல்.!

சென்னையில் பிரபல நகைக்கடையில் பல கோடி மதிப்பிலான தங்கம், வைரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை நடந்த சில மணி நேரத்திலேயே குற்றவாளியை போலீசார் பிடித்துள்ளனர். 

Robbery at famous jewelry store in Chennai

சென்னையில் பிரபல நகைக்கடையில் பல கோடி மதிப்பிலான தங்கம், வைரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை நடந்த சில மணி நேரத்திலேயே குற்றவாளியை போலீசார் பிடித்துள்ளனர். 

சென்னை தாம்பரம் அடுத்த  கவுரிவாக்கம் பகுதியில் ப்ளூஸ்டோன் என்ற நகைக்கடை இயங்கி வருகிறது. இந்த நகைக்கடைக்குள் லிப்ட் வழியாக புகுந்த கொள்ளையர்கள் பல கோடி மதிப்பிலான  தங்கம், வைரம் கொள்ளையடித்துவிட்டு லாக்கரை திறக்க முயற்சி செய்தபோது எச்சரிக்கை அலாரமானது கடையின் மேலாளரான ஜெகதீஷ் என்பவருக்கு சென்று இருக்கிறது. அலாரம் எழுப்பப்பட்ட உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், அங்கு பணியில் இருக்கும் பாதுகாவலருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

Robbery at famous jewelry store in Chennai

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விரைந்தனர். ஆனால், போலீசார் வருவதற்குள் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்தனர். கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். மேலும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடும் பணியில் முடுக்கிவிடப்பட்டது. 

Robbery at famous jewelry store in Chennai

இந்நிலையில், இந்த நகைக்கடையில் கொள்ளையடித்த நபர் அந்த பகுதியிலேயே சுற்றி வந்த போது சிசிடிவி காட்சிகளின் அடிப்படையின் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். சோலையூர் காவல்நிலையத்தில் அழைத்து சென்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொள்ளையடிக்கப்பட்ட தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கொள்ளையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகின்றனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios