Asianet News TamilAsianet News Tamil

வாகன ஓட்டிகளுக்கு முக்கிய தகவல்.. சென்னையில் 12 இடங்களில் போக்குவரத்து மாற்றம்..!

சென்னையில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் வரும் 26-ம்தேதி காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு ஜனவரி 20, 22, 24, 26 ஆகிய 4 நாட்களுக்கு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

Republic Day 2023..Traffic change in 12 places in Chennai
Author
First Published Jan 18, 2023, 7:21 AM IST

சென்னையில் குடியரசு தின கொண்டாட்டம் மற்றும் அணிவகுப்பு ஊர்வல ஒத்திகையை ஒட்டி 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்: சென்னையில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் வரும் 26-ம்தேதி காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு ஜனவரி 20, 22, 24, 26 ஆகிய 4 நாட்களுக்கு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

Republic Day 2023..Traffic change in 12 places in Chennai

* மேற்கண்ட தினங்களில் காமராஜர் சாலையில், காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதி கிடையாது.

* அண்ணா சதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் அருகில் மாற்றப்படுகிறது. வாலாஜா சாலை மற்றும்அண்ணா சாலை சந்திப்பிலிருந்து போர் நினைவுச் சின்னம்நோக்கி வாகனங்கள் வர அனுமதியில்லை.

* அடையாறு பகுதியில் இருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கிச் செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள், கிரின்வேஸ் சாலை சந்திப்பிலிருந்து ஆர்.கே.மடம் சாலை, வி.கே.ஐயர் சாலை, தேவநாதன் சாலை, செயிண்ட் மேரிஸ் சாலை, ராமகிருஷ்ணா மடம் சாலை, லஸ் சர்ச் சாலை, கற்பகாம்பாள் நகர், சிவகாமி சாலை, அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

* அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் பிற வாகனங்கள். (மாநகர பேருந்துகள் உட்பட) காந்தி சிலை சந்திப்பில் இராதாகிருஷ்ணன் சாலை நோக்கி திருப்பப்படும். இராயபேட்டை ஒன் பாயிண்ட், ராயபேட்டை மருத்துவமனை, இராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பீட்டர்ஸ் ரோடு, அண்ணாசாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

*  மயிலாப்பூர் சந்திப்பிலிருந்து சிவசாமி சாலை வழியாக காந்திசிலை நோக்கி வரும் மாநகர பேருந்து வழித்தடம் எண். 21G இராயப்பேட்டை நெடுஞ்சாலை, இராயப்பேட்டை மேம்பாலம் நோக்கி திருப்பி விடப்பட்டு. அவை இராயப்பேட்டை மேம்பாலம், இராயப்பேட்டை நெடுஞ்சாலை, இராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு, அண்ணாசாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

* அதே போன்று மயிலாப்பூர் சந்திப்பிலிருந்து சிவசாமி சாலை வழியாக அண்ணாசதுக்கம் நோக்கி வரும் மாநகர பேருந்து வழித்தடம் எண். 45B மற்றும் 12G ஆகியவை நீல்கிரிஸ் சந்திப்பு மியூசிக் அகாடமி, இராயபேட்டை மருத்துவமனை, இராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு, அண்ணாசாலை, வழியாக தற்காலிக பேருந்து நிறுத்தமான சிந்தாதரிப்பேட்டை இரயில் நிலையம் செல்லலாம்.

*  டாக்டர் நடேசன் சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு வழியாக காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஐஸ் அவுஸ் சந்திப்பு நோக்கி திருப்பி விடப்படும்.

*  டாக்டர்.பெசன்ட் சாலையிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பெசன்ட் சாலை ரவுண்டானாவில் ஐஸ் அவுஸ் நோக்கி திருப்பி விடப்படும்.

* பாரதி சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பாரதி சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் பெல்ஸ் ரோடு நோக்கி திருப்பி விடப்படும்.

*  வாலாஜா சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் உழைப்பாளர் சிலை நோக்கி வரும் வாகனங்கள் (மாநகர பேருந்து தவிர்த்து) பெல்ஸ் ரோடு வழியாக திருப்பி விடப்படும்.

*  அண்ணாசதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக சிந்தாதிரிப்பேட்டை இரயில் நிலையம் அருகில் மாற்றப்படும். 

* பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக அடையாறு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கபாதையில் திருப்பி விடப்பட்டு ராஜா அண்ணாமலை மன்றம் வழியாக வாலாஜா பாயிண்ட் அண்ணாசாலை, அண்ணாசிலை, ஜி.பி.ரோடு, இராயபேட்டை மணிகூண்டு. வெஸ்ட் காட் சாலை. GRH இராயபேட்டை ஒன் பாயிண்ட், நடேசன் சாலை, காரணீஸ்வரர் பகோடா தெரு, சாந்தோம் சாலை வழியாக அடையாறு சென்றடையலாம். 

* வாலாஜா பாயிண்ட் மற்றும் அண்ணா சாலை சந்திப்பிலிருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் வர அனுமதியில்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios