Asianet News TamilAsianet News Tamil

நிவர் புயல்... 12 மணிக்குள் இதை செய்து முடியுங்கள்... சென்னை மாநகராட்சியின் அதிரடி உத்தரவு...!

நிவர் புயல் எதிரொலியை அடுத்து அசம்பாவிதங்களை தவிர்க்க உடனே பேனர்களை அகற்றுமாறு சென்னை மாநகராட்சி நிர்வாகம் அதிரடி உத்தரவை பிறத்துள்ளது. 

Remove all banners immediately...Chennai Corporation order
Author
Chennai, First Published Nov 25, 2020, 11:08 AM IST

நிவர் புயல் எதிரொலியை அடுத்து அசம்பாவிதங்களை தவிர்க்க உடனே பேனர்களை அகற்றுமாறு சென்னை மாநகராட்சி நிர்வாகம் அதிரடி உத்தரவை பிறத்துள்ளது. 

வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் அதி தீவிர புயலாக நண்பகலுக்குள் வலுப்பெற்று இன்று இரவு கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புயல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது சுமார் 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. 

Remove all banners immediately...Chennai Corporation order

தற்போது இந்த புயல், கடலூரிலிருந்து 290 கி.மீ, புதுச்சேரியில் இருந்து 300 கி.மீ., சென்னையில் இருந்து 350 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. ஆகையால், நிவர் புயலை எதிர்கொள்ள அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

Remove all banners immediately...Chennai Corporation order

இந்நிலையில், நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள பேனர் மற்றும் பெயர் பலகைகளை சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக அகற்ற வேண்டும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக நண்பகல் 12 மணிக்குள் அனைத்து பேனர்களையும் அகற்ற வேண்டும். நீதிமன்ற அனுமதியுடன் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தாலும் அவசர நிலை கருதி அகற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios