புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் டிசம்பர் 2ம் தேதி முதல் வடதமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு என்பதால் வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்தமான் கடல்பகுதி மற்றும் வங்கக்கடலை ஒட்டிய பகுதிகளில் புதிதாக உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளதையடுத்து இன்று (நவ.,29) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கூறப்பட்ட நிலையில், தாமதம் ஏற்பட்டு அடுத்த 36 மணி நேரத்தில் வலுப்பெறும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பின் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் டிசம்பர் 2ம் தேதி தமிழகத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மாநிலம் முழுவதும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் டிசம்பர் 1,2 தேதிகளில் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.