ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. இனி சிபிஐ விசாரிக்காது.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

கொலையாளிகள் தொடர்பாக எந்த துப்பு கிடைக்காததால் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு  3 மாதத்தில் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும், சிபிஐ விசாரணை நடத்தியும் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து கொலை செய்யபட்ட ராமஜெயத்தின் சகோதரர் கே.என். ரவிசந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், சிபிஐ விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

Ramajayam murder case..Chennai High Court orders Special Investigation Commission to probe

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயத்தின் கொலை வழக்கை சிறப்பு புலனாய்வுகுழு விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. 

கடந்த 2012-ம் வருடம் மார்ச் 29-ல் நடைபயிற்சி சென்ற தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி - கல்லணை சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தமிழகம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க கோரி ராமஜெயம் மனைவி லதா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். 

Ramajayam murder case..Chennai High Court orders Special Investigation Commission to probe

இதனையடுத்து, கொலையாளிகள் தொடர்பாக எந்த துப்பு கிடைக்காததால் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு  3 மாதத்தில் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும், சிபிஐ விசாரணை நடத்தியும் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து கொலை செய்யபட்ட ராமஜெயத்தின் சகோதரர் கே.என். ரவிசந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், சிபிஐ விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனபதால், மாநில காவல்துறையே விசாரிக்க வேண்டும் என டிஜிபிக்கு மனு அளித்துள்ளதாகவும், அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

Ramajayam murder case..Chennai High Court orders Special Investigation Commission to probe

இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் சீலிடப்பட்ட கவரில் விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையைப் படித்துப் பார்த்த நீதிபதி, விசாரணை அதிகாரி சரியான கோணத்தில் விசாரித்து வருவதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, சிபிஐ விசாரணை அதிகாரியோடு சேர்த்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, சிபிஐக்கு உதவ தமிழக காவல்துறை அதிகாரிகளின் பட்டியல்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Ramajayam murder case..Chennai High Court orders Special Investigation Commission to probe

இந்நிலையில், 2017ம் ஆண்டு முதல் விசாரித்த சிபிஐயால் கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாததால் ராமஜெயம் கொலை வழக்கு சிறப்பு புலனாய்வுகுழு விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், தூத்துக்குடி எஸ்.பி.ஜெயக்குமார், தலைமையில் சிறப்பு  புலனாய்வுகுழு அமைக்கப்பட்டுள்ளது. 3  பேர் கொண்ட குழுவில் அரியலூர் டிஎஸ்பி மதன், சென்னை சிபிஐயை சேர்ந்த ரவி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையை சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் கண்காணிக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், விசாரணையை பிப்ரவரி 21ம் தேதிக்குள் புலனாய்வு குழு தொடங்கினால் நல்லது என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும் வகையில் 15 நாட்களுக்கு ஒருமுறை குழு அறிக்கை தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios