தமிழ்நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டம்.. அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து.!

ஒன்று முதல் அந்த மாதத்தின் கடைசி நாள் வரை அதிகாலை முதல் அந்திமாலை வரை நோன்பு இருந்து வருகின்றனர். அப்போது உண்ணாமல், பருகாமல், தவறான வார்த்தைகளை பேசாமல், எந்த பாவமான காரியங்களிலும் ஈடுபடாமல் இருந்தால் நோன்பு ஏற்றுக்கொள்ளப்படும் என்பது இஸ்லாமிய சட்டங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் உலகம் முழுவதும் தற்போது இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு நோற்று வருகின்றனர்.

Ramadan is celebrated all over Tamil Nadu .. Political party leaders greet

இஸ்லாமியர்களின் பெரு விழாவான  ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பண்டிகை உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அதிகாலையிலேயே மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தி வழிபாடு செய்தனர்.

அரபுகளின் பிறை ஆண்டின் 9வது மாதமான ரமலானை புனித மாதமாக கருதும் உலக இஸ்லாமியர்கள். அதில் பிறை கணக்குப்படி 29 அல்லது 30 நாட்கள் நோன்பு இருப்பது வழக்கம். அதன் அடிப்படையில் உலகம் முழுவதும் தற்போது இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு நோற்று வருகின்றனர். ஒன்று முதல் அந்த மாதத்தின் கடைசி நாள் வரை அதிகாலை முதல் அந்திமாலை வரை நோன்பு இருந்து வருகின்றனர். அப்போது உண்ணாமல், பருகாமல், தவறான வார்த்தைகளை பேசாமல், எந்த பாவமான காரியங்களிலும் ஈடுபடாமல் இருந்தால் நோன்பு ஏற்றுக்கொள்ளப்படும் என்பது இஸ்லாமிய சட்டங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் உலகம் முழுவதும் தற்போது இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு நோற்று வருகின்றனர்.

Ramadan is celebrated all over Tamil Nadu .. Political party leaders greet

தமிழ்நாட்டில் ரமலான் பிறை ஏப்ரல் 3ம் தேதி தென்பட்டதை அடுத்து தலைமை காஜி யால் நோன்பு அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இன்றுடன் தமிழ்நாட்டில் 29 நாள் நோன்பை நிறைவு செய்த இஸ்லாமியர்கள்  வானில் பிறையை பார்த்தனர். ஆனால், எங்கும் பிறை தென்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு தலைமை காஜி சலாஹூத்தீன் முஹம்மத் அய்யூபி வெளியிட்ட அறிவிப்பில்;- ஹிஜ்ரி 1443 ரமலான் மாதம் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆங்கில மாதம் 1.5.2022 அன்று மாலை ஷவ்வால் மாதபிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை. ஆகையால் செவ்வாக்கிழமை ஆங்கில மாதம் 3.5.2022ம் தேதி அன்று ஷவ்வால் மாதம் முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்படுகிறது. ஆகையால், ஈதுல் பிதர் செவ்வாய்கிழமை கொண்டாடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், இஸ்லாமியர்களின் பெரு விழாவான  ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பண்டிகை உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அதிகாலையிலேயே மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தி வழிபாடு செய்தனர். இஸ்லாமியர்களின் பெரு விழாவான  ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பண்டிகைக்கு முதல்வர் ஸ்டாலின், ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

Ramadan is celebrated all over Tamil Nadu .. Political party leaders greet

ஆர்.என்.ரவி (ஆளுநர்): முகமது நபியின் அன்புணர்வு, அறிவுரை குறித்த போதனைகள், எக்காலத்தும் நம்முடன் நின்று, சமூகத்தின் முன்னேற்றத்திற்காக நாட்டுப்பற்றுடன் கூடிய, தாய் நாட்டு மீதான உயர்வு மனப்பான்மையுடன் நாம் நேர்மையான, முற்போக்கான வாழ்க்கையை நடத்திட நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.

ஓபிஎஸ், இபிஎஸ் (அதிமுக): ஈட்டிய செல்வத்தில் ஒரு பங்கை ஏழை, எளியோருக்கு அளித்து, அனைவரும் இன்புற்று வாழந்திட வேண்டி இறைவனை தொழுது, இஸ்லாமிய பெருமக்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி மகிழ்வார்கள். இந்த இனிய திருநாளில் அவர்களுக்கு நல்வாழ்த்துகள்.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): அரசமைப்பு சட்டத்தின்படி சிறுபான்மை மக்களுக்கு மதசுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது.  இந்த திருநாளில் தக்பீர் முழக்கம் கூறி, தொழுது, ஏழைகளுக்கு பெருநாள் கொடை வழங்கி அனைவருடன் உணவருந்தி மகிழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

ராமதாஸ் (பாமக): ரமலான் கற்று தரும் பாடங்களை இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, அனைத்து மதத்தவரும் கடைபிடிக்க வேண்டும். அதை கடைபிடித்தால் உலகம் முழுவதும் மனிதம் தழைக்கும் என்பது உறுதி.

டிடிவி.தினகரன் (அமமுக): சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதமெல்லாம் இல்லாமல், அன்பும் அமைதியும் பெருகி எங்கும் மகிழ்ச்சி நிறைந்திட வாழ்த்துகிறேன். உலக அரங்கில் தனித்துவமுடன் திகழும் இந்தியாவின் பன்முகத்தன்மை மேலும் சிறந்திட இந்த தேசத்தின் காவலர்களாக நம் எல்லோரின் கரங்களும் இணையட்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios