தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் காலம் நிலவி வருவதால்,  கோடை வெப்பம் மக்கள் வாட்டி வதைக்கிறது. கடந்த ஆண்டுகளில் இருந்ததை விட இந்த ஆண்டு வெப்பமும், அனல் காற்றும் அதிமகாக இருப்பதால்  மக்கள் பகல் நேரங்களில் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் காலம் நிலவி வருவதால், கோடை வெப்பம் மக்கள் வாட்டி வதைக்கிறது. கடந்த ஆண்டுகளில் இருந்ததை விட இந்த ஆண்டு வெப்பமும், அனல் காற்றும் அதிமகாக இருப்பதால் மக்கள் பகல் நேரங்களில் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கோடை வெயில் தனிந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவது மத்தியில் தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. 

இதுதொடர்பாக வானிலை மையம் கூறுகையில்;- தமிழகம் மற்றும் புதுவையில் தென்மேற்கு பருவமழை பெரும்பாலான இடங்களில் பரவியுள்ளது. மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள பிபோர்ஜாய் புயல், அடுத்த 6 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெறவுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் நகர்ந்து, வரும் 15ம் தேதி பாகிஸ்தான், கட்ச் கடற்கரை பகுதிகளை அடையும் என்று தெரிவித்துள்ளது. அப்போது காற்றின் வேகம் மணிக்கு 125 முதல் 150 கிலோ மீட்டர் இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.