வரும் 2018-2021ம் ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணம் குறித்து, ஒரு மாதத்தில், ஆன்லைனில் வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை, தமிழக அரசுக்கு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தனியார் கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், 2017-2018ம் ஆண்டுக்கான தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை, தமிழக பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்தது. 2017-2018ம் ஆண்டுக்கான தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை, தமிழக பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்தது. ஆனால், 2018-2021ம் ஆண்டுகளுக்கான கட்டணத்தை அந்த குழு இதுவரை நிர்ணயிக்கவில்லை.

இதனால் தமிழகத்தில் இயங்கும் 7600 தனியார் பள்ளிகளில், பல பள்ளிகள் 2018-2019 ஆண்டில், அரசு நிர்ணயம் செய்த கல்விக் கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பதாக தெரிவிக்கப்பட்டது. எனவே 2018-2021ம் ஆண்டுகளுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயித்து, அதனை ஆன்லைனில் வெளியிடுமாறு தமிழக பள்ளிகள் கல்வி கட்டண நிர்ணயக் குழுவிற்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கல்விக் கட்டணத்தை நிர்ணயித்து ஆன்லைனில் வெளியிட 3 மாத கால அவகாசம் கேட்டார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், கல்விக் கட்டணத்தை நிர்ணயித்து ஆன்லைனில் வெளியிட  ஒரு மாதம் மட்டுமே அவகாசம் வழங்கினர்.