சென்னையில் அதிர்ச்சி.. கல்லூரிக்கு செல்லாமல் பப்ஜி விளையாட்டில் மூழ்கிய மாணவன் தூக்கிட்டு தற்கொலை.!
சென்னை தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்காரணையைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ராகவன். இவரது 2வது மகன் அருண்குமார் கிண்டியில் உள்ள கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் பப்ஜி விளையாட்டில் ஆர்வம் கொண்டவராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக கல்லூரி செல்லாமல் பப்ஜி விளையாடியுள்ளார்.
சென்னை தாம்பரம் அருகே ஒரு வாரமாக கல்லூரிக்கு செல்லாமல் பப்ஜி விளையாட்டில் மூழ்கிய நிலையில் இருந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்காரணையைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ராகவன். இவரது 2வது மகன் அருண்குமார் கிண்டியில் உள்ள கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் பப்ஜி விளையாட்டில் ஆர்வம் கொண்டவராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக கல்லூரி செல்லாமல் பப்ஜி விளையாடியுள்ளார்.
இந்நிலையில், அவரின் தாய், தந்தை வேலைக்குச் சென்றுள்ளனர். அப்போது, சகோதரர் வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய போது அருண்குமார் வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அருண்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.