சென்னையில் உணவு இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு தனியார் நிறுவனங்களோ, சமூக ஆர்வலர்களும் சமைத்த உணவு வழங்க மாநகராட்சி அதிரடியாக தடை விதித்துள்ளது.

உலகம் முழுவதும் 190 நாடுகளுக்கும் மேல் பரவி கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை, இந்தியளவில் கொரோனா வைரசால் 11 பேர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 562-ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள்    பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இந்நிலையில், தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவலை தடுப்பதற்காக 144 தடை உத்தரவையும் அவர் தமிழகம் முழுக்க அமல்படுத்தி இருக்கிறார். அதேவேளையில்,  மத்திய அரசும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆனால், சென்னையில் உணவு இல்லாத பொதுமக்களுக்கு தனியார் நிறுவனங்களும் சமூக ஆர்வலர்களும் உணவு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பாக சென்னை மாநகராட்சிமுக்கிய தகவலை வெளியிட்டுள்ளது ;- அதில், ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், உணவு வழங்க பொதுமக்கள் வெளியே வருவதும், அதனைப் பெற மக்கள் கூடுவதும், கொரோனா பரவலை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், விரும்பினால் விரும்பினால் ஆர்வலர்கள் அரிசி, பருப்பு, எண்ணெய், முகக் கவசம், கிருமி நாசினி உள்ளிட்டவற்றை மாநகராட்சியிடம் தரலாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.