Chennai Power Shutdown: சென்னையில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? முழு விவரம் உள்ளே..!
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று. அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்றும், இந்த பணிகள் விரைவாக முடிவடைந்தால் முன்னதாக மின் தடை நீக்கப்படும் என்றும் மின்சார வாரியத்தின் மூலம் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னையில் இன்று பராமரிப்பு பணி காரணமாக சேத்துப்பட்டு, போரூர், அம்பத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று. அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்றும், இந்த பணிகள் விரைவாக முடிவடைந்தால் முன்னதாக மின் தடை நீக்கப்படும் என்றும் மின்சார வாரியத்தின் மூலம் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க;- சேலம் - கோவை தினசரி பயணிகள் ரயில்.. 18 நாட்களுக்கு ரத்து.. என்ன காரணம் தெரியுமா..?
சேத்துப்பட்டு பகுதி
பி.சி.ஹாஸ்டல் ரோடு, செனாய் நகர், பிருந்தாவனம் தெரு, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, குட்டி தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
போரூர் பகுதி
திருமுடிவாக்கம் சம்பந்தம் நகர், லட்சுமி நகர், வர்ஷா நகர், வழுதலம்பேடு கிராமம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அம்பத்தூர் பகுதி
அயபாக்கம் 6500 முதல் 10000 டி.என்.எச்.பி. அயப்பாக்கம், 848 குடியிருப்புகள் திருவேற்காடு கேந்த்ரா விஹார், இன்டஸ்ட்ரியல் மேக்னா எஸ்டேட், நூம்பல் மெயின் ரோடு, பி.எச்.ரோடு.
ஆவடி பகுதி
திருவள்ளுவர் தெரு, திருமலை நகர், குளக்கரை தெரு, எட்டியம்மன் நகர் பாண்டீஸ்வரம் சத்தியா நகர், கரலபாக்கம், கதவூர், வலச்சேரி, மேல கொண்டையூர் பட்டாபிராம் ஐயப்பன் நகர் வி.ஜி.வி நகர், கண்ணபாளையம், மேல்பாக்கம் வி.ஜி.என் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
பெரம்பூர் பகுதி
காந்தி நகர் வெங்கடேஷ்வரா நகர் 2வது தெரு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.