ஆந்திராவின் சினிமா ஜாம்பவான்களை அல்லு தெறிக்க அலறவிட்ட ஒரு கேரக்டர் ஸ்ரீரெட்டி. ’சினிமா சான்ஸ் தர்றேன்னு சொல்லி என்னை நல்ல்ல்ல்லா யூஸ் பண்ணி சீரழிச்சுட்டாங்க. உங்களுக்கு என் திறமை வேண்டாம், என்னோட உடம்புதானடா வேணும்?’ என்று டோலிவுட்டின் சினிமா ஹப்பில் நின்றபடி மேலாடையை களைய முயன்று கதிகலங்க வைத்தவர். 

அதன் பிறகு கோடம்பாக்கம் பக்கம் வந்து ஏ.ஆர்.முருகதாஸ், லாரன்ஸ், சுந்தர் சி...என்று சிலருக்கு கிலி கிளப்பிய இந்தக் கிளி, இப்போது பொள்ளாச்சி பொண்ணுங்க விவகாரத்தில் தாறுமாறாக கோபமடைந்திருக்கிறது ‘அந்த மாதிரி’ ஆண் வர்கத்தின் மீது. பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வக்கிரத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக வெடித்திருக்கும் விவகாரம் குறித்து கொந்தளித்து பேசும் ஸ்ரீ...”என்னங்க இது? நடிக்கப் போற இடத்துலதான் பொண்ணுங்களுக்கு பாதுகாப்பு இல்லேன்னா, படிக்க போற பொண்ணுங்களுக்கும் நிம்மதி இல்லை.

வீட்டில் இருக்கிற லேடிங்களுக்கும் வேலி இல்லைன்னா என்ன அர்த்தம்?! பொள்ளாச்சி கிரிமினல்தனத்தை  கேள்விப்பட்ட பிறகு எனக்கு தூக்கமில்லை. அந்த பொண்ணு ‘அண்ணா! அண்ணா!’ன்னு கதறுதை பார்க்கிறப்ப, சாப்பிட கூட மனசு வரலேன்னு என் ஃப்ரெண்ட்ஸ் சொல்றாங்க. பொண்ணுங்களை விழ வைக்கிறதுக்கு ‘ஐ லவ் யூ!’ங்கிற வார்த்தையை பயன்படுத்தியிருக்கானுங்க, காதலிக்கிற மாதிரி நடிச்சுக் கவுத்தியிருக்கானுங்க!ன்னு சொல்றாங்க. 

டேய், காதல்னா என்னான்னு தெரியுமாடா? அது எவ்வளவு பரிசுத்தமான அன்பு, அதுல எவ்வளவு நம்பிக்கைக்கு உரிய விஷயமுன்னு தெரியுமாடா? அதைச் சொல்லி அந்தப் பொண்ணுங்களை நம்ப வெச்சு கடத்திட்டு போயி சீரழிச்சிருக்கீங்களே! மிரட்டி, நம்பவெச்சு வேட்டையாடப்பட்ட பொண்ணுங்களோட வலியை என்னால புரிஞ்சுக்க முடியுது. நம்பி ஏமாறுவதுங்கிறது இந்த உலகத்துலேயே மிகப்பெரிய வலி. நம்பிக்கை துரோகத்துக்கு இந்த மண்ணுல மன்னிப்பே கிடையாது. இவனுங்களுக்கெல்லாம் தூக்கு தண்டனையை விட அதிகமான தண்டனையை கொடுக்கணும்.  இந்த வழக்கை அரசாங்கம் விறுவிறுன்னு துல்லியமா நடத்தி முடிக்கணும். அட்ராசிட்டி பண்ணுன பசங்க ஒவ்வொருத்தரையும் அடையாளம் கண்டுபிடிச்சு, அரெஸ்ட் பண்ணி அவங்களோட குற்றத்தை நிரூபிக்கணும். அப்புறம், வளைகுடாவுல தர்ற மாதிரி தண்டனையை கொடுக்கணும்.

 

அவனுங்களோட ’பிரைவேட் பார்ட்டை’ வெட்டி அகற்றணும். நம்பி மோசமான பொண்ணுங்க அடைஞ்ச வலியை விட ஆயிரம் மடங்கு வலியை அவனுங்களை அனுபவிக்க வெச்சு, வெச்சு கொஞ்சம் கொஞ்சமா சாக விடணும். சட்டுன்னு அவனுங்க இறந்துடக்கூடாது. இவனுங்களுக்கு கிடைக்கிற தண்டனையை பார்த்து இனி எவனுமே இந்த நாட்டுல பொண்ணுங்களோட கற்புக்கு எதிரான எந்த ஆயுதத்தையும் கையில் எடுக்க துணியக்கூடாது.

இந்த மண்ணு சக்தி நிறைஞ்ச மண். பெண் சக்தி பெருசா போற்றப்படுற மண். தமிழக மண்ணில் ஜெயலலிதாம்மா மாதிரி வீரமான பொண்ணுங்க  வாழ்ந்து சாதிச்ச மண். இதுல பெண்கள் தோற்கவும், நம்பிக்கை துரோகத்தால் வீழவும் விடலாமா? அதிகாரத்தில் உள்ளவங்களே யோசிங்க ப்ளீஸ்!” என்றிருக்கிறார். இந்த பொண்ணுக்குள்ளே இருக்கிற பொறுப்புணர்ச்சி, புரட்சியை  யாராச்சும் கவனிச்சீங்களா டியர் சினிமாகார்ஸ்?