Asianet News TamilAsianet News Tamil

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு... மீண்டும் அசத்திய மாணவிகள்..! கோட்டைவிட்ட மாணவர்கள்..!

தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கான முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி- 93.64% மாணவர்கள் தேர்ச்சி- 88.57% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் 5.07% அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

plus two results announced
Author
Tamil Nadu, First Published Apr 19, 2019, 9:57 AM IST

தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கான முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.தமிழகத்தில் மொத்தம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி- 93.64% மாணவர்கள் தேர்ச்சி- 88.57% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் 5.07% அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 7082 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 88 ஆயிரம் பிளஸ் 2 மாணவர்கள் தேர்வை கடந்த மாதம் எழுதினர். மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த வாரம் முடிந்தன. இந்நிலையில் பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று காலை 9:30 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவித்திருந்தனர். 

அரசு தேர்வுத் துறையின் www.tnresults.nic.in www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தங்கள் மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம். தேர்வர்களின் பதிவு எண் பிறந்த தேதி மாதம் ஆண்டு ஆகியவற்றை பதிவு செய்து மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். படிக்கும் பள்ளிகளிலும் மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம்.

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 6 முதல் 13 வரை சிறப்பு துணை தேர்வு நடத்தப்படுகிறது. அதற்கு விண்ணப்பிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இந்த தகவலை அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் பட்டியலை நாளை காலை 9:00 மணி முதல் 26ம் தேதி வரை தங்கள் பள்ளிகளில் பெற்று கொள்ளலாம். தனி தேர்வர்கள் வரும் 24-ம் தேதி காலை 9:00 மணி முதல் வரும் 26ம் தேதி வரை www.dge.tn.nic.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 91.3 சதவீதம் மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற மாவட்டங்களில் திருப்பூர் முதலிடத்திலும், ஈரோடு 2-வது இடத்திலும், பெரம்பலூர் 3-வது இடத்திலும் உள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios