தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கான முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். எப்போதும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் போதும் முதல் இடத்தை பிடிக்கும் நாமக்கல் மாவட்டம் தற்போது 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதிக அளவில் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடத்திலும், ஈரோடு 2-வது இடத்திலும், பெரம்பலூர் 3-வது இடத்திலும் உள்ளன.

மாவட்ட வாரியாக தேர்ச்சி விபரம் :

* திருப்பூர் :  95.37 சதவீதம்
* ஈரோடு :   95.23 சதவீதம்
* பெரம்பலூர்: 95.15 சதவீதம்
* கோவை :   95.1 சதவீதம்
* நாமக்கல்:   94.97 சதவீதம்
* கன்னியாகுமாரி: 94.81 சதவீதம் 
* விருதுநகர்: 94.44 சதவீதம்
* நெல்லை: 94.41 சதவீதம்
* தூத்துக்குடி: 94.23 சதவீதம்
* கரூர்: 94.07 சதவீதம்
* சிவகங்கை: 93.81 சதவீதம்
* மதுரை: 93.64 சதவீதம்
* திருச்சி: 93.56 சதவீதம்
* சென்னை: 92.96 சதவீதம்
* தேனி:92.54 சதவீதம்
* ராமநாதபுரம்: 92.30 சதவீதம்
* தஞ்சாவூர்: 91.05 சதவீதம்
* ஊட்டி: 90.87 சதவீதம்
* திண்டுக்கல்: 90.79 சதவீதம்
* சேலம்: 90.64 சதவீதம்
* புதுக்கோட்டை: 90.01 சதவீதம்
* காஞ்சிபுரம்: 89.90 சதவீதம்
* அரியலூர்: 89.68 சதவீதம்
* தருமர்புரி: 89.62 சதவீதம்
* திருவள்ளூர்: 89.49 சதவீதம்
* கடலூர்: 88.45 சதவீதம்
* திருவண்ணாமலை: 88.03 சதவீதம்
* நாகை :87.45 சதவீதம்
* கிருஷ்ணகிரி: 86.79 சதவீதம்
* புதுச்சேரி: 91.22 சதவீதம்