தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் 95% பேர் தேர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். தேர்ச்சி விகிதத்தில் மாணவிகளே அதிகம் பெற்றுள்ளனர். 

கடந்த மார்ச் 6ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு மாணவ மாணவிக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. 7,278 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 16 ஆயிரத்து 618 மாணவ மாணவியர் மற்றும் 5,032 தனித்தேர்வர்கள் இத்தேர்வில் பங்கேற்றனர். இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருந்ததால் வழக்கமாக நடப்பதை போல இல்லாமல் சில வாரங்களுக்கு முன்பாகவே 11ம் வகுப்பு தேர்வுகள் நடந்து முடிந்தது. 

இந்த நிலையில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது.www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய அதிகாரப்பூர்வ இணைய பக்கங்களில் சென்று மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் மாணவர்கள் இந்த தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். அதேபோல மாணவர்கள் தங்கள் பள்ளியிலும், பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்திலும் இந்த முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். 

இந்த தேர்வில் தமிழகம் மற்றும் புதுவையில் 95% பேர் தேர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். வழக்கம் போல மாணவிகள் மாணவர்களை விட தேர்ச்சி விகிதத்தில் முந்தியுள்ளனர். மாணவிகள் 96.5%  மாணவர்கள் 93.3%  தேர்ச்சி அடைந்துள்ளனர்.