சென்னை எர்ணாவூர் பகுதி திமுக வழக்கறிஞர் ஹரிஹரன் என்பவர் தனது காரில் முல்லை நகர் அருகே சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, 4 இருசக்கர வாகனத்தில் வந்த 7 கொண்ட மர்ம கும்பல் திடீரென காரின் முகப்பு பக்கத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியது. இதனையடுத்து, அவரை கத்தி உள்ளிட்ட பயங்கத ஆயுதங்களால் தாக்க முயன்றனர். ஒருவழியாக சிறிய காயங்களுடன் அவர்களிடம் உயிர் தப்பினார்.

சென்னையில் திமுக வழக்கறிஞர் கார் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை எர்ணாவூர் பகுதி திமுக வழக்கறிஞர் ஹரிஹரன் என்பவர் தனது காரில் முல்லை நகர் அருகே சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, 4 இருசக்கர வாகனத்தில் வந்த 7 கொண்ட மர்ம கும்பல் திடீரென காரின் முகப்பு பக்கத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியது. இதனையடுத்து, அவரை கத்தி உள்ளிட்ட பயங்கத ஆயுதங்களால் தாக்க முயன்றனர். ஒருவழியாக சிறிய காயங்களுடன் அவர்களிடம் உயிர் தப்பினார்.

கஞ்சா கும்பல் அட்டகாசம்

இதனையடுத்து, வழக்கறிஞர் ஹரிஹரன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு விரைந்த போலீசார் அவரிடம் புகாரை பெற்றுக்கொண்டார். 

சிசிடிவி பதிவு

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் எர்ணாவூர் பகுதியில் கஞ்சா விற்பனை குறித்து போலீசுக்கு தகவல் அளித்ததால் முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நடத்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.