தீபாவளிக்கு சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்... போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காவல்துறை ஏற்பாடு!!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் மக்கள் பண்டிகைகளை பெரிதும் கொண்டாடவில்லை. தற்போது ஊரடங்கு விலக்கப்பட்டு கொரோனாவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து இந்த ஆண்டு வெகு விமரிசையாக தீபாவளி கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: திருச்சியிலிருந்து தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்! - 3 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பு!
அதற்காக சென்னையில் பணிபுரியும் மக்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக செங்கல்பட்டு சுங்கச்சாவடி காவல்துறை சார்பில் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு சுங்க சாவடியில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்வோர் பேருந்துகளில் ஏறுவதற்கு வசதியாக பயணிகள் காத்திருப்பு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்கள்... சென்னை வந்தடைந்தது உடல்கள்!!
சுங்கச்சாவடி அருகேயுள்ள சாலையோர கடைகள் வருகின்ற நான்கு நாட்களுக்கு வியாபாரம் செய்ய வேண்டாம் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் தென் மாவட்டங்களுக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரிப்பதால் அனைத்துத் உத்தரவுகளும் நாளை முதல் அமல்படுத்தப்படும் எனவும், இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் கட்டாயம் தலைக்கவசம், வாகன ஆவணங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.