Asianet News TamilAsianet News Tamil

சிதைந்து போன சமூக விலகல் நோக்கம்..! கும்பல் கும்பலாக சென்னையில் இருந்து புறப்பட்ட மக்கள்..!

போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் மக்கள் இருக்கும் பேருந்துகளில் இடம் பிடிக்க முண்டியடிக்கின்றனர். பலர் ஜன்னல் வழியாக பேருந்துகளுக்குள் ஏறுவதையும் பேருந்து கூரைகளின் மீது அமர்ந்து பயணம் செய்வதை காண முடிந்தது.

people from chennai started going to their native due to corona virus
Author
Tamil Nadu, First Published Mar 24, 2020, 7:40 AM IST

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழகத்தில் இருக்கும் அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி இன்று மாலை 6 மணி முதல் 31 ம் தேதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் அமலுக்கு வர இருக்கிறது.

people from chennai started going to their native due to corona virus

இதையடுத்து சென்னை போன்ற நகரங்களில் வேலைக்காக தங்கியிருக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நேற்றிலிருந்து கிளம்பிச் சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் சென்னை முழுவதும் மக்கள் கூட்டம் கூட்டமாக பேருந்து நிலையங்களில் குவிந்து வருகின்றனர். தலைநகர் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன்காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் பெரும் இன்னல்களை சந்தித்துள்ளனர். 

கொரோனா பீதி: சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள்

போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் மக்கள் இருக்கும் பேருந்துகளில் இடம் பிடிக்க முண்டியடிக்கின்றனர். பலர் ஜன்னல் வழியாக பேரூந்துகளுக்குள் ஏறுவதையும் பேருந்து கூரைகளின் மீது அமர்ந்து பயணம் செய்வதை காண முடிந்தது. கொரோனா பரவுதலை தடுக்கும் வகையில் மக்கள் அதிக அளவில் பொது இடங்களில் கூட வேண்டாம் என கூறப்பட்டிருக்கும் நிலையில் சமூக விலகலுக்கான நோக்கம் முற்றிலும் சிதைந்து போயுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios