துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கார் ஓட்டுநர் மகள் நிவேதிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் கார் ஓட்டுநர் பாஸ்கர். இவர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பொதுப்பணித்துறை ஊழியர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் நிவேதிகா தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

 

இந்நிலையில், நிவேதிகா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

முதற்கட்ட விசாரணையில் அடிக்கடி டிக்டாக் செய்து கொண்டிருந்ததால் நிவேதாவை தந்தை பாஸ்கர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த நிவேதிதா தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.