பைக் மீது கன்டெய்னர் லாரி மோதியதில், தனியார் கம்பெனி உரிமையாளர் பலியானார். ஊழியர், படுகாயமடைந்தார்.

பைக் மீது கன்டெய்னர் லாரி மோதியதில், தனியார் கம்பெனி உரிமையாளர் பலியானார். ஊழியர், படுகாயமடைந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னை மண்ணடி சாலை விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் அகமது பைசல் (45). பை தயாரிக்கும் கம்பெனி நடத்தி வந்தார். இவரது கடையில் மணிகண்டன் (38) என்பவர் வேலை செய்கிறார்.

இந்நிலையில, நேற்று மதியம் அகமது பைசல், ஊழியர் மணிகண்டனுடன் பைக்கில் அண்ணாசாலைக்கு புறப்பட்டார். பைக்கை அகமது பைசல் ஓட்டி சென்றார். பின்னால் மணிகண்டன் உட்கார்ந்து இருந்தார். பூக்கடை முத்துசாமி பாலம் அருகே சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, எதிரே வந்த கன்டெய்னர் லாரி, பைக் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அகமது பைசல், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். மணிகண்டன் படுகாயமடைந்தார்.

தகவலறிந்து யானைக்கவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை பிரேத பரிசோதனைக்காகவும், மணிகண்டனை சிகிச்சைக்காகவும் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கன்டெய்னர் லாரி ராஜஸ்தானை சேர்ந்த மகேந்திர சிங் (43) என்பவரை கைது செய்தனர். லாரி பறிமுதல் செய்யப்பட்டது.