சென்னை ஓஎம்ஆர் சாலை மெட்ரோ ரயில்களுக்கான முக்கிய ஹப்பாக மாறும்; பிறந்தது மெட்ரோ ரயில் புதிய திட்டங்கள்!!

இன்னும் சில ஆண்டுகளில் சென்னை ஓஎம்ஆர் சாலை மெட்ரோ ரயில்களுக்கான முக்கிய சந்திப்பு பாலமாக அமைய இருக்கிறது. அதற்கான திட்டங்கள் தற்போதே துவங்கிவிட்டது.

Old Mahabalipuram road links all Chennai metro links including ECR Velachery

இந்த மையத்தில் இருந்து சோழிங்கநல்லூர், துரைபாக்கம் ஆகியவற்றை இணைக்கும் வகையிலும், சென்னை நகரின் பல்வேறு இடங்களுக்கு மெட்ரோ ரயில்களில் செல்வதற்கான மையப்புள்ளியாகவும் ஓஎம்ஆர் சாலை இருக்கப் போகிறது. இவற்றுடன் ஈசிஆர் சாலையை எளிதில் சென்றடையலாம்.

இரண்டாம் கட்ட திட்டம் முடிவடைந்தவுடன்,  ஓஎம்ஆர் சாலை (பழைய மகாபலிபுரம் சாலை) ஒரு முக்கிய மெட்ரோ மையமாக மாறும். மெட்ரோ பாதைகள் முக்கிய சந்திப்புகளான ஒக்கியம் துரைப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் வழியாக செல்லும். கிழக்கு கடற்கரை சாலை மற்றும் வேளச்சேரியை ஒக்கியம் துரைப்பாக்கம் அல்லது சோழிங்கநல்லூர் ஸ்டேஷன் அல்லது இரண்டிலிருந்தும் நீட்டிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால், மெட்ரோ ரயில் மூலம் ஈசிஆர் மற்றும் வேளச்சேரியை அடைவதற்கான நுழைவாயிலாக ஓஎம்ஆர் இருக்கும்.

ஓஎம்ஆர் சாலியாயிலதான் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் வரும் இந்த முக்கிய இரண்டு சந்திப்புகளும் உள்ளன. ஒக்கியம் துரைப்பாக்கம் மூன்றாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் சிறுசேரி சிப்காட்டை மாதவரம் மில்க் காலனி இணைக்கிறது. சோழிங்கநல்லூர் உள் இணைப்பு மையமாக மூன்றாவது திட்டத்தில் வரும் ரயில் நிலையங்களையும், ஐந்தாம் திட்டத்தில் வரும் ரயில் நிலையங்களையும், அதாவது மாதவரம் மில்க் காலனியில் இருந்து சோழிங்கநல்லூரை இணைக்கும். 

யாரும் பயப்பட வேண்டாம்! இந்த வைரஸ் விரீயம் குறைவு தான்! இவங்க மட்டும் கொஞ்சம் உஷாரா இருங்க.. அமைச்சர் மா.சு.!

ஒரே இடத்தில் பல்வேறு தண்டவாளங்களை இணைக்கும் வகையிலும், இவற்றுக்கு செல்வதற்கு சென்ட்ரல் மற்றும் எக்மோரில் அமைக்கப்பட்டு இருப்பது போன்று மேம்பாலம் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஓஎம்ஆர் மெட்ரோ ரயில் சந்திப்பாக மாறும்போது அண்ணாநகர், போரூர், ஆலந்தூர், மடிப்பாக்கம், நுங்கம்பாக்கம்,  அடையாறு, மாதவரம் ஆகிய இடங்களில் இருந்து வருபவர்கள் ஒக்கியம் துரைப்பாக்கம் அல்லது சோழிங்கநல்லூரில் இறங்கி கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்லலாம்.

Old Mahabalipuram road links all Chennai metro links including ECR Velachery

கோயம்பேடு, ஒக்கியம் துரைப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகியவை எதிர்காலத்தில் மெட்ரோ ரயில் பாதைகளை நீட்டிப்பதற்கான மையங்களாக காணப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் கோயம்பேடு ரயில் நிலையத்தை ஆவடி வரையிலான நீட்டிப்புப் பாதையுடன் இணைக்க முடியும்.

மெட்ரோ பயணிகள், சோழிங்கநல்லூரில் உள்ள படிக்கட்டுகள் அல்லது எஸ்கலேட்டரைப் பயன்படுத்தி பிளாட்பாரங்களை மாற்ற வேண்டும். 3 முதல் 5 வரையிலான நடைபாதைகளுக்குச் செல்ல வேண்டும். இரண்டு வழித்தடங்களையும் இணைக்கும் முந்தைய திட்டத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. முன்னதாக, மாதவரம்-கோயம்பேடு-எல்காட்-துரைப்பாக்கம் - அடையாறு-மாதவரம் ஆகிய 88 நிலையங்களில் 81.3கிமீ சுற்றுப்பாதையில் இயக்க திட்டமிடப்பட்டது. அதிகாரிகள் இந்த திட்டத்தை கைவிட்டுள்ளனர். பின்னர் ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். 

ஓஎம்ஆர் மெட்ரோ ரயில் சந்திப்பு அமைந்த பின்னர் ஈசிஆர் அல்லது வேளச்சேரிக்கு செல்வது 50% முதல் 80%  வரை பயண நேரம் குறையும் என்று ஓஎம்ஆரில் குடியிருப்பவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சோழிங்கநல்லூரில் இருந்து வேளச்சேரிக்கு செல்வதற்கு தற்போது நான்கு வழித்தடங்கள் உள்ளன. இந்த வழித்தடங்களில் 45 நிமிடங்களில் சென்றடையலாம். இணைப்பு நீட்டிக்கப்படும்போது ஐடி ஊழியர்கள் ஈசிஆர் மக்களுக்கு பயனளிக்கும். மேலும் துரைப்பாக்கம் - ரேடியல் சாலை வழியாக பல்லாவரம் மற்றும் தாம்பரம் இணைக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்ட விரிவாக்கத் திட்டம் நடந்து வருகிறது. மேலும் இது நகரின் பல பகுதிகளுக்கு இணைப்பை கணிசமாக விரிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ. 61,843 கோடி மதிப்பீட்டில் 118.9 கிலோமீட்டரில் மூன்று வழித்தடங்களில் இந்தக் கட்டத்தில் மொத்தம் 112 நிலையங்கள் அமையும். 

2 ஆம் கட்டத்தின் கீழ் உள்ள காரிடார் 3 மாதவரம் மற்றும் சிப்காட் 45.8 கிலோமீட்டர்களை இணைக்கும். 26.1 கிமீ நடைபாதை 4 சிஎம்பிடி மற்றும் பூந்தமல்லி புறவழிச்சாலையை இணைக்கும். 47 கிலோ மீட்டர் தொலைவிலான மாதவரம் மற்றும் சோழிங்கநல்லூர் காரிடார் 5ல் இணைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேலை,வெட்டி இல்லாமலா சட்டமன்றம் வந்திருக்கிறோம்..! சட்டப்பேரவையில் அமைச்சருக்கு எதிராக கொந்தளித்த எடப்பாடி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios