மக்களே உஷார்.. ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கிய நபரின் நிலையை பார்த்தீங்களா? போலீஸ் ஸ்டேசனில் கதறல்.!
சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்த சென்னை மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் ஒருவர், தனியார் கடன் செயலி ஒன்றை தனது செல்போனில் டவுண்லோடு செய்து உள்ளார். செயலியை டவுண்லோடு செய்யும்போது, செல்போனில் உள்ள தகவல்களை எடுப்பதற்கான பல்வேறு அனுமதிகளை அளித்துள்ளார்.
சென்னையில் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் ஒருவர் ஆன்லைன் கடன் செயலி மூலம் 2500 ரூபாய் கடன் பெற விண்ணப்பித்த நிலையில் ஒரு வாரம் கழித்து 35,000 ரூபாய் பணம் கட்ட சொல்லி மிரட்டுவதாகவும், அப்படி இல்லையென்றால் மனைவியை ஆபாசமாக சித்தரித்து புகைப்படங்கள் வெளியிடபோவதாக மிரட்டல் விடுப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்த சென்னை மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் ஒருவர், தனியார் கடன் செயலி ஒன்றை தனது செல்போனில் டவுண்லோடு செய்து உள்ளார். செயலியை டவுண்லோடு செய்யும்போது, செல்போனில் உள்ள தகவல்களை எடுப்பதற்கான பல்வேறு அனுமதிகளை அளித்துள்ளார். சமூக வலைதளங்கள் மூலமாக உள்ள விளம்பரங்கள் மூலம் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பின்னர் அந்த செயலியில் 2,500 ருபாய் கடன் வாங்குவதற்கு விண்ணப்பித்துள்ளார்.
விண்ணப்பித்த பின்னர் பணம் வரவில்லை. ஒரு வாரம் கழித்து பணத்தை செலுத்துமாறு வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் திடீரென மிரட்டியுள்ளார். 2500 ரூபாய் வாங்கிய கடனுக்கு வட்டியாக 35,000 ரூபாய் செலுத்த வேண்டும் என மிரட்டியதாக பாதிக்கப்பட்ட சென்னை மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வங்கியில் சென்று விசாரித்தபோது தான் பணம் கேட்டு செயலியில் விண்ணப்பித்தது மூன்று நாள் கழித்து கடன் கிடைத்தது தெரியவந்ததாகவும், செயலி மூலம் கடனாகப் பணம் வந்தது தெரியாமல் இருந்ததாகவும், பணத்தை செலுத்தாததால் என்னுடைய போட்டோக்களை செல்போன்களில் இருந்து எடுத்து, என் தொடர்பில் உள்ளவர்களுக்கு தனது மனைவி, உறவினர்கள், குழந்தைகள் ஆகியோர் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அனுப்பி பணத்தை கட்டுமாறு மிரட்டுவதாக சென்னை எம்ஜிஆர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.