தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கொரோனா தொற்றிற்கு முறையான தடுப்பு மருந்துகள் இல்லாததால்  மூன்றாம் கட்டமாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் கண்டனங்கள் எழுந்தன. நாற்பது நாட்களாக மது இல்லாமல் இருந்த குடிமகன்கள் டாஸ்மாக் வாசலில் காத்திருந்து சரக்கு பாட்டில்களை வாங்கிச்சென்றனர். 

இந்நிலையில் டாஸ்மாக் மது விற்பனைக்கு தடை விதிக்க கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது டாஸ்மாக் கடைகளில் தனிமனித இடைவெளி சரியாக கடைபிடிக்கப்படவில்லை என்றும், குடிபோதையால் நேற்று முழுவதும் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள் குறித்தும் வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. மேலும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய விஷயங்களுக்கு கூட அனுமதி அளிக்கப்படாத போது டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது ஏன் என மனுதாரர் தரப்பில் இருந்து கேள்வி எழுப்பப்பட்டது. 

இதையும் படிங்க: புடவையில் அம்மாவையே ஓரங்கட்டிய குஷ்பு மகள்... ஓவர் ஸ்லிம் லுக்கில் தாறுமாறு வைரலாகும் போட்டோ...!

இதையடுத்து பொது முடக்கம் முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதே சமயத்தில் ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்ய தடை இல்லை என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால் தமிழகத்தில் இதுவரை ஆன்லைன் மது விற்பனை கிடையாது. ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி மது ஆர்டர் செய்வர்களுக்கு கூட டோக்கன் வழங்கப்பட்டு, வரிசையில் நின்று தான் மது  பாட்டில்களை வாங்கிச்சென்றனர். 

இதையும் படிங்க: சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டியா இது?... இளம் வயதிலேயே கவர்ச்சியில் ஓவர் தாராளம் காட்டிய போட்டோ....!

தற்போது ஆன்லைன் மது விற்பனையை தொடரலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்படி ஆன்லைன் விற்பனை செய்ய தீர்மானித்தால் தமிழக அரசு மது பாட்டில்களை டோர் டெலிவரி செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் மது விற்பனைக்கான சாத்தியக்கூறுகள் குறித்து பொருந்திருந்து தான் பார்க்க வேண்டும்.