வார வேலை நாட்களை நான்காக குறைத்து, பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி, ஊதியத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய புதிய தொழிலாளர் விதிகள் அமல்படுத்தப்படுமா என்பது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
வார வேலை நாட்களை நான்காக குறைத்து, பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி, ஊதியத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய புதிய தொழிலாளர் விதிகள் அமல்படுத்தப்படுமா என்பது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் தற்போது அனைத்து தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் தினமும் 8 மணி நேர வேலை செய்து வருகின்றனர். அதன்படி வாரத்துக்கு 6 நாட்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையை அரசு மாற்ற வேண்டும் என்றும் ஊழியர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிட வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி கடந்த 2019ம் ஆண்டு தொழிலாளர்களுக்கான 4 சட்டங்களை மத்திய அரசு நாடாளுமன்ற இரு அவையிலும் நிறைவேற்றியது. தொழில் துறை உறவுகள், ஊதியம், சமூக பாதுகாப்பு மற்றும் தொழில்சார் சுகாதார பாதுகாப்பு, பணி நிலவரம் ஆகியவற்றில் புதிய விதிகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் இன்னும் இதனை நடைமுறைபடுத்தவில்லை.

மேலும் அரசு ஊழியர்களுக்கு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் வாரத்தில் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். இதனால் பொதுமக்கள் அரசின் சேவைகளை பெறுவதில் காலதாமதம் ஏற்படும். இந்த திட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இந்த புதிய திட்டத்தை தனியார் நிறுவனங்களில் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த புதிய நடைமுறை தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் வேலை நேரம், சம்பளம் ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதனை தொடர்ந்து இந்த புதிய நடைமுறையை அரசு நிறுவனங்களுக்கும் விரைவில் அமல்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தப்படுமா என்ற கேள்விக்கு இது போன்ற திட்டம் எதையும் மத்திய அரசு பரிசீலனை செய்யவில்லை என்று மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்கள் பதில் கூறியுள்ளார்.
