வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று உருவானது. இன்று அது நிவர் புயலாக உருவெடுத்தது. தற்போது சென்னையில் இருந்து 470 கி.மீ. தொலைவில் புயல் நிலைக்கொண்டுள்ளது. இந்தப் புயல் நாளை மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதனால். சென்னையில் நேற்று இரவு முதலே தொடர்ந்து மழை பெய்துவருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை முதல் மிக கனமழைக்கு பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.