ஷாக்கிங் நியூஸ்.. காதல் திருமணம் செய்த இரண்டே நாளில் புதுப்பெண் தற்கொலை.. இதுதான் காரணமா?
வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், அனிதா தன்னுடன் வேலைபார்க்கும் ஆவடி கோவர்த்தனகிரி அன்பு நகர் முதல் தெருவைச் சார்ந்த உதயா என்பவரை காதலித்து வந்துள்ளார். பின்னர் இருவரும் கடந்த 7ம் தேதி ராயபுரத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
திருமணமான இரண்டே நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் திருமணம்
சென்னை பூந்தமல்லி முத்துக்குமரன் நகரைச் சேர்ந்தவர் அனிதா (26). பட்டதாரியான இவர் பூந்தமல்லியை அடுத்த காட்டுபாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இதனிடையே, அனிதாவுக்கு, வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், அனிதா தன்னுடன் வேலைபார்க்கும் ஆவடி கோவர்த்தனகிரி அன்பு நகர் முதல் தெருவைச் சார்ந்த உதயா என்பவரை காதலித்து வந்துள்ளார். பின்னர் இருவரும் கடந்த 7ம் தேதி ராயபுரத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனையடுத்து, ஆவடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து இரு வீட்டாரையும் அழைத்து சமாதானம் பேசி உதயகுமார் வீட்டிற்கு அனிதாவை அழைத்து சென்றனர்.
தற்கொலை
இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையில் அனிதா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆர்டிஓ விசாரணை
போலீசார் முதற்கட்ட விசாரணையில் அனிதாவின் தாய் வீட்டிலிருந்து போன் செய்து உன்னால் எங்கள் குடும்ப மானம் போய்விட்டது என்று தொந்தரவு செய்ததால் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது. மேலும், திருவள்ளூர் ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார். திருமணமான இரண்டே நாளில் புதுப்பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஆவடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க;- உதயநிதிக்கு அமைச்சர் பதவியை கொடுக்க என்ன தயக்கம்? ஜெ. உதவியாளரின் அரசியல் கணக்கு..!