பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில், ஒருவருக்கு உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். 

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா தீவிர சிகிச்சை பிரிவை  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பின்னர், பாதுகாப்பாக ஆங்கில புத்தாண்டை கொண்டாட வலியுறுத்திடும் பேரணி தொடக்கப்பட்டது. இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- பிரட்டனில் தொற்று உறுதியான 17 பேரில் ஒருவரது மாதிரி முடிவு வெளியாகியுள்ளது. 

அதில், தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவருக்கு தனிஅறையில் வைத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்களுக்கு புனே ஆய்வகத்திலிருந்து பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. 

தமிழகத்தில் உருமாறிய கொரோனா பரவும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. பிரிட்டனில் இருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்புடைய அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்யப்படும். பிரிட்டனிலிருந்து வந்த 2,800 பேரில் 1,549 பேரை பரிசோதித்துவிட்டோர். சென்னை, செங்கல்பட்டில் அதிகமானார் கண்டறிய வேண்டியுள்ளது. திருமண நிகழ்வுகளில் விதிமுறை மீறினால் மண்டபங்கள் மூடப்படும். அனைவரும் முகக்கவசம் அணிவது அவசியம் என சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார்.