Asianet News TamilAsianet News Tamil

உயிரை கொல்லும் மருத்துவ நீட் தேர்வு... தமிழகத்தில் அடுத்தடுத்து 3 மாணவிகள் தற்கொலை..!

நீட் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் விழுப்புரத்தைச் சேர்ந்த மோனிஷா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2017-ல் அனிதா, 2018-ல் பிரதிபா ஆகியோரை தொடர்ந்து, இந்தாண்டும் 3 மாணவிகளின் தற்கொலை செய்த சம்பவம் தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

neet exam fail...suicide student
Author
Tamil Nadu, First Published Jun 6, 2019, 2:36 PM IST

நீட் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் விழுப்புரத்தைச் சேர்ந்த மோனிஷா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2017-ல் அனிதா, 2018-ல் பிரதிபா ஆகியோரை தொடர்ந்து, இந்தாண்டும் 3 மாணவிகளின் தற்கொலை செய்த சம்பவம் தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 neet exam fail...suicide student

நாடு முழுவதும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வின் முடிவுகள் இன்று மதியம் 1.35 மணியளவில் வெளியாகின. நீட் தேர்வு எழுதியவர்களில் 74.92% மாணவ மாணவிகள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தமிழகத்தில் 48.57% பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக டெல்லியில் 74.92% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் 50 இடங்களுக்குள் தமிழக மாணவ, மாணவிகள் ஒருவர் கூட இடம் பெறவில்லை. ராஜஸ்தானைச் சேர்ந்த மாணவர் நளின் கந்தல்வால் முதல், தேசியளவில் நீட் தேர்வில் முதலிடம் பிடித்துள்ளார். தமிழகத்தில் மாநில அளவில் ஸ்ருதி என்ற மாணவி 685 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளார். neet exam fail...suicide student

இந்நிலையில் நீட் தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தினால், திருப்பூரைச் சேர்ந்த ரிதுஸ்ரீ (17) மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த வைஷியா (17) மாணவிகள் தற்கொலை செய்துகொண்டனர். இவர்களுடைய தற்கொலை பலரையும் சோகம் அடையச் செய்துள்ளது. இதில் திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீ, 12-ம் வகுப்பு வகுப்பில் 600-க்கு 490 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். நீட் தேர்வில் வெறும் ஒரு மதிப்பெண்ணில் தோல்வி அடைந்த வேதனையில் தூக்குப்போட்டு அவர் தற்கொலை செய்துகொண்டார். அதேபோல் மற்றொரு மாணவியான வைஷியா தஞ்சாவூர் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர். நீட் தேர்வில் தோல்வி அடைந்த மனவேதனையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். neet exam fail...suicide student

இதனிடையே இன்று விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடு கிராமத்தில் நீட் தோல்வியால் மாணவி தற்கொலை செய்து கொண்டார். நீட் தோல்வியால் தற்கொலை செய்வதாக கடிதம் எழுதிவைத்துவிட்டு மாணவி மோனிஷா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மருத்துவர் கனவு தகர்ந்த வேதனையில் 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், தமிழகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios