சென்னை நந்தனம், ஒய்.ஏம்.சி.ஏ கல்லூரி எதிரே நடந்த கோர விபத்தில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

எழும்பூரில், உள்ள தனியார் கம்பெனியில் ஆந்திராவை சேர்ந்த பவனி, நாகலட்சுமி, மற்றும் சிவா ஆகியோர் என்ஜினியர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் மூவரும் இன்று வேலைக்கு செல்வதற்காக ஒரே பைக்கில், சென்றுள்ளனர்.

அப்போது, பாரிஸ் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்னல்,  இவர்கள் சென்ற பைக் மோதியுள்ளது. இதில் நிலை தடுமாறிய மூவரும் கீழே விழுந்தனர். 

இந்த கோர சம்பவத்தில் பவனி (22 ), நாகலட்சுமி (22 ) ஆகியோர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகினர். சிவா (22 ) என்கிற இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ராயப்பேட்டை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் நந்தனம் பகுதியில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

தற்போது போக்குவரத்து போலீசார், இந்த விபத்து குறித்து விசாரணை செய்து வருகிறார்கள். போலீசாரின் விசாரணையில் விபத்தில் மரணமடைந்த இரண்டு பெண்களும் வேளச்சேரி பகுதியில் வீடு எடுத்து தங்கி வேலை செய்து வருவது தெரியவந்துள்ளது.

மேலும் ஹெல்மெட் அணிந்திருந்தாள், இவர்களுக்கு உயிர் போகும் ஆபத்தை தவிர்த்திருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர்.