MK Stalin Mother Dayalu Ammal Admitted in Hospital : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
MK Stalin Mother Dayalu Ammal : தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் தாயாரும், மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் மனைவியுமான தயாளு அம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வயது மூப்பு காரணமாக திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து தயாளு அம்மா ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தயாளு அம்மாளின் உடல்நிலை குறித்து மருத்துவ குழு தொடர்ந்து பரிசோதனை செய்து வருகிறது. மேலும், அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவனை தரப்பிலிருந்து முதல்கட்ட தகவல் வெளியாகி வருகிறது. சென்னை கோபாலபுரத்தில் வசித்து வந்த தயாளு அம்மாளுவிற்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2ஆவது மனைவி. கடந்த 1936ஆம் ஆண்டு பிறந்துள்ளார். இதைத் தொடர்ந்து 1948 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
கருணாநிதி மற்றும் தயாளு அம்மாவிற்கு முக அழகிரி, முக ஸ்டாலின், முக தமிழரசு ஆகிய மகன்களும், செல்வி கீதா கோவிலம் என்ற மகளும் இருக்கின்றனர்.

