ஒரே போன்.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய அடுத்த நொடி.. குவிந்த நிவாரண பொருட்கள்..!
இந்த எளியோன் வைத்த வேண்டுகோள்களை உடனடியாக செயல்படுத்திக் கொண்டும் மற்றும் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
மனித உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் அரசு முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில், “வணக்கம். நேற்றைய முன்தினம் விளையாட்டுத்துறை மற்றும் சிறப்புப்பணிகள் துறை அமைச்சர் மாண்புமிகு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் செம்மஞ்சேரி மற்றும் பெரும்பாக்கம் குடியிருப்பு பகுதிகளின் வெள்ளப்பாதிப்புகளைப் பற்றி விரிவாக என்னிடம் தொலைபேசி வழியாக கேட்டறிந்தார்.
உடனடியாக என்னென்ன செய்ய வேண்டும் என்பதை விரிவாகக்கூறினேன். இடமாற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு சிறப்பு அலுவலர் உடனே நியமிக்க வேண்டும் என்றேன்,அன்று மாலையே அதற்கான சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டார்.மருத்துவ முகாம்கள் வீடு தேடி செல்ல வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தேன் இன்று முதல் அது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரண பொருட்களை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தேன்.இன்று முதல் 6000 மேற்பட்ட குடும்பங்களுக்கான நிவாரணப் பொருட்கள் அவரின் கட்சி சார்பாக வழங்கவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர்களுக்கு பல்வேறு சிறப்பு முயற்சிகளை உடனே எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தன் அடிப்படையில் நாளை முதல் அதை தொடங்க உள்ளார்கள் என்பதையும் அறிந்தேன்.
இந்த எளியோன் வைத்த வேண்டுகோள்களை உடனடியாக செயல்படுத்திக் கொண்டும் மற்றும் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளை செம்மஞ்சேரி குடியிருப்புப்பகுதி மக்கள் சார்பாகவும் சமூக அமைப்புகளின் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
குறைந்த விலையில் தாய்லாந்தில் நியூ இயர் கொண்டாட ஆசையா..சூப்பரான ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்..