Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் முதல் முறையாக 9.16 கோடி யூனிட்கள் மின்சாரம்: அமைச்சர் செந்தில் பாலாஜி!

சென்னையில் முதல் முறையாக 9.16 கோடி யூனிட்கள் மின்சாரம் பயன்படுத்தப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்

Minister senthil balaji says 9.16 crore units of electricity used in Chennai for the first time
Author
First Published Jun 9, 2023, 2:47 PM IST

சென்னையில் முதன்முறையாக நேற்று (08/06/2023) 9.16 கோடி யூனிட்கள் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் குடியிருப்புகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிகக்கட்டங்கள் என 3.10 கோடி மின் இணைப்புகள் உள்ளன. தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் பகிர்மானக் கழகம் தேவையான மின்சாரத்தை இவைகளுக்கு விநியோகித்து வருகிறது. மாநிலத்தின் தினசரி மின்தேவை சராசரியாக 15 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இது கோடைகாலத்தில் 16 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கும் எனவும், குளிர்காலத்தில் 12 ஆயிரம் மெகாவாட்டாக குறையும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரயிலில் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பம் அரசு நகரப் பேருந்துகளில் அறிமுகம்

தற்போது கோடைகாலம் என்பதால் வீடுகளில் ஏசி, மின்விசிறி, ஏர்கூலர் உள்ளிட்ட மின்சாதனங்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. வெயில் சுட்டெரித்து வருவதால், மின் தேவையும் அதிகரித்துள்ளது.

 

 

இந்த நிலையில், சென்னையில் முதல் முறையாக 9.16 கோடி யூனிட்கள் மின்சாரம் பயன்படுத்தப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “முதன்முறையாக சென்னையில் நேற்று (08/06/2023) 9.16 கோடி யூனிட்கள் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் 02/06/2023 அன்று 9.06 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது.. சென்னையின் நேற்றைய மின் தேவை 3872 மெகாவாட் ஆகும். அது எவ்வித தடங்களுமின்றி பூர்த்தி செய்யப்பட்டது.” என பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios